டி20 உ.கோ அணியில் அவரை கழற்றிவிட்டால் ஆபத்து உங்களுக்கு தான் – இந்தியாவை எச்சரிக்கும் ஆஸி ஜாம்பவான்

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தனது மிகச் சிறந்த பேட்டிங் திறமையால் ரன் மெஷினாக 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் பகலானால் இரவு வரும் என்பது போல் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து கடந்த 3 வருடங்களாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் பாரமின்றி தவித்து வருகிறார்.

kohli

- Advertisement -

இருப்பினும் இது சோதனை காலகட்டங்களிலும் 2020 ஜனவரிக்குப் பின் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இடையிடையே 30, 50, 70 என்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவரும் அனைவரும் பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள். ஏனெனில் ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தனியான தரத்தை உருவாக்கியுள்ள அவர் இதிலிருந்து விடுபட அழுத்தங்களை கொடுத்து  வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை படிபடியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கினார்.

இடம் கேள்விக்குறி:
அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அரை சதம் கூட அடிக்காதது உட்பட முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் பொறுமையிழந்த அனைவரும் எப்போது சதமடிப்பார் என்று பேச்சுக்களை விட்டுவிட்டு அணியிலிருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Kohli-1

குறிப்பாக பெரிய பெயரை வைத்துக்கொண்டு டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலி நீக்கப்படுவதில் எந்த தவறுமில்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் விமர்சித்தது புயலை கிளப்பியது. மேலும் தற்போது நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் அவர் அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

ஆபத்து உங்களுக்கே:
இருப்பினும் 70 சதங்களை அடித்து ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள விராட் கோலியை விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தாலே பார்முக்கு திரும்பி விடுவார் என்று கெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் உட்பட நிறைய வெளிநாட்டவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் வரும் அக்டோபரில் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை நீக்கினால் அது உங்களுக்கு தான் ஆபத்தை  கொடுக்கும் என்று இந்திய அணி நிர்வாகத்தை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரித்துள்ளார்.

Gilchrist

தற்போது எடுக்கும் ஓய்வு அவருக்கு புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்ப உதவும் என்று கணித்துள்ள அவர் சமீபத்திய பேட்டியில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் விராட் கோலியை நீங்கள் நீக்க நினைப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அவர் ஒருவேளை புத்துணர்ச்சி பெறுவதற்காக விலகி இருக்கலாம். அவருக்கு மிகப் பெரிய அனுபவம் உள்ளது. மேலும் அவர் நீண்ட காலமாக அபாரமாக செயல்பட்டு தனக்கென்று ஒரு தரத்தை அமைத்துள்ளார். அதனாலேயே இப்படி நாம் ஒரு சிறந்த வீரருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் சமீபத்திய தொடர்களில் முதன்மையான வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களை வைத்து அசால்டாக வெல்லும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிகளில் ஒன்றாக உள்ளதாகவும் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது. “இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். அவர்கள் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோக இளம் வீரர்களால் அவர்கள் தங்களது அணியை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச அளவில் போட்டி போடும் அனுபவத்தை நிரப்பி வருகிறார்கள். எனவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையில் மற்ற அணிகளை விட அவர்களுக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs WI : இப்படியா டி20 டீமை செலக்ட் பண்ணுவீங்க. அணித்தேர்வை விமர்சிக்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் உலகக் கோப்பையை வெல்வதற்காக ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement