- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவாஸ்கர், சாஸ்திரி பேச்சை கேட்டு.. முட்டாள் ஆட்டுக் குட்டியாகிடாதீங்க.. ரோஹித்தை எச்சரித்த கணேஷ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்தியா 295 ரன்கள் வித்யாசத்தில் வெற்றியின் பெற்றது.

ஆனால் ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ரோகித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தனது ஓப்பனிங் இடத்தை முதல் போட்டியில் அசத்திய கே.எல் ராகுலுக்காக விட்டுக் கொடுத்த அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார்.

- Advertisement -

வல்லுநர்கள் ஆலோசனை:

ஆனால் மிடில் ஆர்டரில் 20 ரன்கள் கூட அடிக்காத அவர் சுமாராக விளையாடினார். அதன் காரணமாக இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் மூன்றாவது போட்டியில் ரோகித் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதை செய்வது இறைச்சி கூடத்திற்கு செல்லும் ஆட்டுக்குட்டி போன்றது என முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

ஏனெனில் ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கி உடனடியாக அசத்துவதற்கு இது இந்தியா கிடையாது என்று அவர் கூறியுள்ளார். எனவே சவாலான ஆஸ்திரேலியாவில் ராகுல் – ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாகவும் ரோகித் மிடில் ஆர்டரில் விளையாடுவதுமே சிறந்தது என்று கணேஷ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

ஆட்டுக்குட்டியாக வேணாம்:

“ரோகித் சர்மா ஏற்கனவே தன்னம்பிக்கை மற்றும் ரன்களை இழந்துள்ளார். அந்த சூழ்நிலையில் 3வது போட்டியில் அவரை ஓப்பனிங் வீரராக களம் இறங்குமாறு வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். அப்படி சொல்வது குறைந்தபட்சம் முட்டாள்தனமானது. ஏனெனில் ரோகித் சர்மா உடனடியாக ஓப்பனிங்கில் களமிறங்கி ரன்கள் குவிக்க இந்தத் தொடர் இந்திய துணை கண்டத்தில் விளையாடப்படவில்லை”

இதையும் படிங்க: இந்த விஷயத்தை யோசிச்சா பும்ராவுக்கு ஓய்வே கொடுக்க வேணாம்னு புரியும் – சுட்டிக்காட்டிய மஞ்சரேக்கர்

“ஒருவேளை ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கினால் அது இறைச்சி கூடத்திற்கு செல்லும் ஆட்டுக்குட்டியாக இருக்கும்” என்று கூறினார். அதாவது ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் புதிய பந்து அதிகப்படியான வேகம், ஸ்விங், பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால் அங்கே சுமாரான ஃபார்மில் இருக்கும் ரோஹித் துவக்க வீரராக விளையாடுவது சிறந்த முடிவாக இருக்காது எனலாம்.

- Advertisement -