இந்திய அணியின் எதிர்கால கேப்டன்கள் அவர்கள் 2 பேரில் ஒருவர் தான் – தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு

Dinesh-Karthik
- Advertisement -

மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அவர் அந்த மனநிறையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்தார். இதன் காரணமாக டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வருங்கால இந்திய கேப்டன்கள் :

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது தனிப்பட்ட குடும்ப சூழல் காரணமாக சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வை அறிவித்து விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்கால இந்திய அணியின் கேப்டன் யார்? என்பது பலரது மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் பெயரை அடுத்த கேப்டனாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருக்கும் இரண்டு வீரர்கள் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : அனைவரும் எதிர்பார்க்கும் கே.எல் ராகுல், பும்ரா ஆகிய சீனியர் வீரர்களை தவிர்த்து தினேஷ் கார்த்திக் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயரை கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வரும் இவர்கள் இருவரும் இந்திய அணிக்காகவும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக கேப்டன்சி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : பிசிசிஐ மீது தவறில்ல.. நாங்க தான் செலக்ட் பண்ணோம்.. எங்களிடமே நல்லது இருக்கு.. ஆப்கானிஸ்தான் அறிக்கை

கே.எல் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் தற்போது 30 வயதை கடந்து விட்டதால் தற்போது இளம் வீரர்களாக இருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விதயம் யாதெனில் : சுப்மன் கில் தற்போதே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். எனவே அவர் எதிர்கால இந்திய அணியின் மூன்று வகையான நிரந்தர கேப்டனாக சுப்மன் கில் வர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement