கம்பிர் செய்ததை… என்னிடமும் எதிர்பார்ப்பார்கள்…தினேஷ் கார்த்திக் – ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா ?

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்த ஐபிஎல்-இல் என் தலைமையிலான கொல்கத்தா அணி பிளேஆஃப் சுற்றுவரை செல்ல வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய ஆசை என்று நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.கொல்கத்தா அணி தனது முதல் லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஏப்ரல் 8ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.

- Advertisement -

சென்ற ஐபிஎல் வரை கொல்கத்தா அணியை திறம்பட வழிநடத்தி வந்த கம்பீர் இந்த ஐபிஎல்-இல் கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதிலாக முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் இந்தாண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. அப்போது பேசிய தினேஷ் கார்த்திக் “கொல்கத்தா அணியை இதுவரையிலும் கம்பீர் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அவரைப்போலவே நானும் திறமையாக வழிநடத்தி செல்லவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அணி நிர்வாகமும் என்னிடம் அதைத்தான் எதிர்பார்க்கும். எனவே ஒரு கேப்டனாக எனக்கு இந்த ஐபிஎல்-இல் அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும். அதேவேளையில் ஐபிஎல்-இல் இக்கட்டான சூழ்நிலைகளில் அணியை மீட்க எந்தவொரு வரிசையிலும் இறங்கி விளையாடிடும் சூழல் ஏற்படலாம். நான் அதற்கு தயாராகவே உள்ளேன்.

இந்த ஐபிஎல்-இல் குறைந்தபட்சம் பிளேஆஃப் சுற்றுவரை செல்ல வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய எண்ணம்” என்றும் பேசினார்.மேலும் “இன்னும் முத்தரப்பு தொடரில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை பற்றி கேட்கிறார்கள். அது முடிந்துபோன ஒன்று. நான் அதை கடந்து வந்துவிட்டேன். அதன் பின்னர் நிறைய நடந்துவிட்டது. இதோ விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ளது. அதில் சிறப்பாக எப்படி செயல்படுவது என்பதே என்னுடைய தற்போதைய நினைப்பெல்லாம்” என்றார்.

Advertisement