இப்படி ஒரு திறமையான வீரர் வழி தவறி போவதை பாக்க கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மாவின் கோச் வேதனை

Dinesh Lad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். அதுமட்டும் இன்றி மும்பை அணிக்காக தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இப்படி தனது கரியரின் ஆரம்ப கட்டத்தை அமர்க்களமாக துவங்கிய அவருக்கு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும் மிக இளம் வயதில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.

ப்ரித்வி ஷா குறித்து வருத்தம் தெரிவித்த : ரோஹித் சர்மாவின் கோச்

அப்படி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதமடித்த அவர் அடுத்த சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்றவர் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் புகழ்ந்து வந்த வேளையில் வெகு விரைவாகவே அவருக்கு கோடிகளில் பணம் குவிந்ததால் மோசமான பழக்க வழக்கம் மற்றும் முறையற்ற உடற்தகுதி என பல்வேறு விடயங்களால் அதிகளவு விமர்சனம் செய்யப்பட்டு இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவரை ஐபிஎல் தொடரிலும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது மோசமான நிலையை சந்தித்துள்ள அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் வழியில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் பார்த்ததிலேயே திறமையான ஒரு வீரரான ப்ரித்வி ஷா வழி தவறி போவதை பார்க்க வருத்தமாக உள்ளதாக ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது :

- Advertisement -

நான் 10 வயதிலிருந்து ப்ரித்வி ஷாவை பார்த்து வருகிறேன். மிக இளம் வயதிலேயே திறமை வாய்ந்த வீரரான அவருக்கு நீண்ட ஒரு பயணம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய பயணத்தில் என்ன நடந்தது? என்று எனக்கு சரியாக தெரியவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்து பயணித்ததால் தற்போது அவர் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற காரணமே அவர்தான் – சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து

அவரைப் போன்ற ஒரு வீரர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து அவர் பேட்டிங் செய்யும் விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருக்கும். தற்போது அவர் அணியில் இல்லை என்றாலும் திறமையான பல இளம் வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்து வருகின்றனர் என தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement