நான் பாத்ததுலேயே தோனி தான் பெஸ்ட்.. ஹால் ஆஃப் பேம் விருதுபெற்ற தல தோனிக்கு – வாழ்த்து கூறிய தினேஷ் கார்த்திக்

DK and MS
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி : கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஹால் ஆஃப் ஃபேம் என்னும் விருதினை வழங்குவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய பல்வேறு சிறப்பான வீரர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்கள் சார்பாக 10 பேருக்கு ஹால் ஆப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர் : தினேஷ் கார்த்திக்

இவ்வேளையில் இந்த 2025 ஆம் ஆண்டு 11-வது இந்திய கிரிக்கெட் வீரராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அந்த விருதினை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஐசிசி தோனிக்கு இந்த விருதினை வழங்கியதும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் :

ஆல் ஆஃப் ஃபேம் விருது பெற்ற தோனிக்கு முன்னாள் வீரர்களான ஏ.பி. டிவில்லியர்ஸ், ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தோனியை பாராட்டி வாழ்த்து கூறும் வகையில் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பேசியிருந்த தோனியின் நண்பரும், முன்னாள் இந்திய வீரருமான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் இதுவரை நான் கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி.

- Advertisement -

ஒருநாள் கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் மேஸ் என அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். அதை தவிர்த்து ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார். அனைத்தையும் அணியின் தலைவனாக முன் நின்று வென்றுள்ளார் என தினேஷ் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னுடைய கேப்டன்சி இவ்ளோ சூப்பரா இருக்க காரணமே இதுதான்.. சீக்ரெட்டை ஓபன் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்

தோனியுடன் சமகாலத்தில் பயணித்த தினேஷ் கார்த்திக்கு அவரது இருப்பினால் இந்திய அளவில் நிரந்தர இடம் இல்லாமல் போனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, தனது கரியர் முழுவதும் தோனியுடன் நல்ல நட்பில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement