சிங்கத்தோட குகைக்குள்ள போறாரு.. புதிய கேப்டன் சுப்மன் கில்லை எச்சரித்த – தினேஷ் கார்த்திக்

Kartik and Gill
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை மிகப் பிரமாதமான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

சிங்கத்தின் குகைக்குள் சுப்மன் கில் நடக்க இருக்கிறார் : தினேஷ் கார்த்திக்

இதன் காரணமாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது இருந்து வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பெரிய அனுபவம் இல்லாத வீரரான சுப்மன் கில்லின் முதல் கேப்டன்சி தொடரே இங்கிலாந்து தொடராக அமைந்துள்ளதால் இந்து தொடரானது அவருக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

அனுபவ வீரர்கள் இன்றி இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சுப்மன் கில்லை எச்சரிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இனிமேல் தான் இந்திய அணியின் கேப்டன்சி என்ன என்று சுப்மன் கில்லுக்கு தெரிய வரும். இன்னும் இந்திய அணியின் கேப்டன் மகத்துவத்தை அவர் உணர்ந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. தற்போது சிங்கத்தின் குகைக்குள் சுப்மன் கில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் எந்த ஒரு அணியாக இருந்தாலும் இங்கிலாந்து சென்று விளையாடுவது என்பது எளிதானது கிடையாது. பல்வேறு சூப்பர் ஸ்டார்களை கொண்ட அணிகளே இங்கிலாந்து சென்று விளையாடுவதற்கு சிரமப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது இந்திய அணியும் ஒரு சவாலான தொடரை எதிர்கொள்ள இருக்கிறது.

இதையும் படிங்க : 4 ஓவரில் 81 ரன்ஸ்.. பச்சைப்புள்ளையிடம் வீராப்பை காட்டிய வெ.இ.. அயர்லாந்து வீரர் மோசமான உலக சாதனை

இதில் ஒரே ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் தற்போதுள்ள இங்கிலாந்து அணியின் பௌலிங் யூனிட் பலவீனமாக இருப்பது மட்டுமே இந்திய அணி இருக்கும் ஒரு பாசிட்டிவான விடயம். இந்த தொடரில் சுப்மன் கில் நிறைய சவால்களை கேப்டனாக எதிர்கொள்வார் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement