மூன்றாவது டெஸ்டில் பும்ராவை விளையாட வைக்காதீங்க.. அதிரடியான கருத்தை கூறிய – தினேஷ் கார்த்திக்

DK
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு ஆட்டத்திலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த தொடரை ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்று கணக்கில் கைப்பற்றி விட்டது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடக்கூடாது :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை விளையாட வைக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த அதிரடியான கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா கடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டியிலும் விளையாடி இருந்தார். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவது இந்திய அணிக்கு நல்லது தான் இருந்தாலும் எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடரின் 5 போட்டியிலும் பும்ரா விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

எனவே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஓய்வளிக்க வேண்டும். அப்படி பும்ராவை அமர வைக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மீண்டும் சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இந்த சமயத்தில் நிச்சயம் ஒரு ஓய்வு தேவை. அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் அவரால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இதுக்கு மேல என்ன வேனும்.. தோனியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் காசி விஸ்வநாதன் – விவரம் இதோ

தினேஷ் கார்த்திக் இப்படி கூறுவதும் சரியான ஒரு கருத்து தான். ஏனெனில் இந்த கடைசி போட்டியில் பும்ரா விளையாடி காயம் ஏதும் ஏற்பட்டால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement