Dinesh Karthik : கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ள தினேஷ் கார்த்திக் – காரணம் இதுதான்

தினேஷ் கார்த்திக் சென்றவாரம் உலகக்கோப்பை செல்லும் இந்திய அணிக்கு தேர்வானார். அதேவேளையில் தற்போது கொல்கத்தா அணிக்கு ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்

karthik
- Advertisement -

தினேஷ் கார்த்திக் சென்றவாரம் உலகக்கோப்பை செல்லும் இந்திய அணிக்கு தேர்வானார். அதேவேளையில் தற்போது கொல்கத்தா அணிக்கு ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Karthik

- Advertisement -

கொல்கத்தா அணி இந்த ஐ.பி.எல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. அந்த மூன்று போட்டிகளிலும் ரசலின் அதிரடி ஆட்டத்தினாலே கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதன்பின்பு கொல்கத்தா தற்போது தொடர்ந்து 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் கொல்கத்தா அணியின் கேப்டனை மாற்றினால் அந்த அணி வெற்றி பெரும் என்கிற வாக்கில் தினேஷ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார் என்கிற வதந்தி பரவியது. ஆனால், இதுகுறித்து முதன்முறையாக கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் காலிஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் சிறப்பாகவே ஆடுகிறார்.

அணியின் வெற்றி தோல்வி என்பது போட்டியின் சூழ்நிலை பொறுத்தே அமையும். அதனால் பிளேயர்கள் சரியாக ஆடவில்லை. கேப்டன்சி சரியாக அமையவில்லை என்றெல்லாம் அர்த்தமில்லை. தோல்வி பெற்ற நாள் நம்முடையது இல்லை என்று நினைத்துக்கொள்ளவேண்டும். மற்றபடி தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை அவரே தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று காலிஸ் கூறினார்.

Advertisement