இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்ல விளையாட ரெடியா இருக்கேன் – தமிழகவீரர் விருப்பம்

IND
- Advertisement -

ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் முதல் முறையாக இந்திய அணி ஒரு உலககோப்பையில் விளையாட உள்ளதால் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2012 க்கு பின் முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

Cup

- Advertisement -

ரோஹித் தலைமையில் புதிய அணி:
குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்த படுமோசமான தோல்வி தான் சமீபத்தில் விராட் கோலி அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலக முக்கிய காரணமாகும்.

அப்படிபட்ட வேளையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் புதிய அணியை உருவாக்கி வெற்றியை பெறும் தீவிரமான முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karthik

தினேஷ் கார்த்திக் விருப்பம்:
இந்நிலையில் இந்திய டி20 அணியில் மீண்டும் விளையாட விரும்புவதாக தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஒரு செய்தியில் அவர், “இது விளையாட்டை விளையாடுவது பொருத்தது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் எனது நாட்டிற்காக மீண்டும் விளையாடி என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். இதுதான் எனது மிகப்பெரிய லட்சியமாகும். அந்த லட்சியத்தை அடைவதற்கு தேவையான பயிற்சிகளை முயற்சிகளையும் தற்போது செய்து வருகிறேன்.

- Advertisement -

அடுத்த 3 வருடங்களில் என்னால் முடிந்த அளவுக்கு முழுமூச்சுடன் விளையாட விரும்புகிறேன். நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். சமீப காலங்களாக எங்களின் மாநில அணியில் நாங்கள் பெற்ற வெற்றிகள் மிகவும் அபாரமானது. அந்த வெற்றி பயணத்தில் நானும் பங்காற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது நாட்டுக்காக விளையாடுவது அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதே எனது முதன்மையான லட்சியமாகும். டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற நெருப்பு இன்னும் எனக்குள் ஜொலிப்புடன் எரிந்து கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.

Dkarthik

இந்தியாவுக்காக கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதன்பின் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டுக்காகவும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்குமா :
குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தமிழகத்தின் கேப்டனாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தார். அதன் பின் நடந்த விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் தமிழகத்தை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். குறிப்பாக இறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் சதமடித்து 116 ரன்கள் குவித்த போதிலும் தமிழகத்தால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

karthik

சமீப காலங்களாக பினிஷர் இடத்தில் சரியான வீரர்கள் இல்லாமல் இந்திய டி20 அணி தடுமாறுகிறது. இதற்கு முன் அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றே கூறலாம். குறிப்பாக கடந்த 2018இல் இலங்கையில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான “நிதஹாஸ் கோப்பை பைனலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து” இந்தியாவிற்கு கோப்பையை பெற்று கொடுத்தார். எனவே அந்த இடத்தில் விளையாட முயற்சிக்க உள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஷாருக்கான் எடுத்த அந்த புதுமுடிவு தான். இந்திய அணியில் இடம்கிடைக்க காரணமா? – ரசிகர்கள் மகிழ்ச்சி

இருப்பினும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பினிஷெராக ரிஷப் பண்ட் முதல் தேர்வாக உள்ளார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவுக்காக இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் அதில் 399 ரன்களை 143.52 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement