ஐ.பி.எல் தொடரில் இந்த ஒரு அணி என்னை ஏலத்தில் எடுத்தா நான் ஹேப்பி – தினேஷ் கார்த்திக் விருப்பம்

Karthik
- Advertisement -

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் மார்ச் மாதம் இறுதியில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 14-வது சீசனில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதனைதாதொடர்ந்து தற்போது 15-ஆவது ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் இணைந்து இரண்டு அணிகள் சேர்ந்து 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL
IPL Cup

அதுமட்டுமின்றி இந்த சீசனுக்கு முன்னர் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கான அனைத்து வீரர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு தற்போது இறுதி கட்டமாக 590 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தற்போது வீரர்கள் அனைவரும் தங்களது பெயர் ஏலத்தில் எந்த அளவிற்கு விலை போகிறது என்பதை காண காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதால் இந்த வருடம் எந்த அணிக்கு தான் விளையாட விரும்புகிறேன்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

மேலும் இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் தக்கவைக்கப்படாத அவர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் தற்போது மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவிட்டுள்ளார். இந்நிலையில்தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து பேசியுள்ள அவர் தனது வெளிப்படையான கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் சென்னையை சேர்ந்தவன் அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால் எதுவும் நம் கையில் கிடையாது. எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அந்த அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்த ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன் என தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதையும் படிங்க : பைனலில் ஆட்டநாயகன் விருது – ஒரே குடும்பத்தில் இருந்து 2 அண்டர் 19 சாம்பியன்கள் ! யார் அவர்கள்?

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் இதுவரை சென்னை அணிக்காக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement