எதுக்கு அவரை டீம்ல வச்சிருக்கீங்க.. அவரை தூக்கிட்டு நிதீஷ் ரெட்டியை கொண்டுவாங்க – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்

DK
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவித்தது. பின்னர் அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

ஷர்துல் தாகூரை நீக்கிட்டு நிதீஷ் ரெட்டியை தேர்வு செய்யலாம் : தினேஷ் கார்த்திக்

இதன் காரணமாக 6 ரன்கள் முன்னிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெடுகளை இழந்து 90 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 96 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருப்பதால் போட்டியின் கடைசி 2 நாள் ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இன்றைய நான்காம் நாள் முழுவதும் இந்திய அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் பட்சத்தில் நிச்சயம் போட்டியின் ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணியை வீழ்த்தவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் நிதீஷ் ரெட்டியை விளையாட வைக்கலாம் என தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நிதீஷ் ரெட்டியையே இந்த முதல் போட்டியில் நாம் பயன்படுத்தி இருக்கலாம்.

- Advertisement -

ஏனெனில் ஷர்துல் தாகூரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக எடுத்துவிட்டு அவரை 6 ஓவர்கள் மட்டுமே வீச வைப்பது தவறு. அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் அவர் 8-ஆவது இடத்தில் களமிறங்கி 1 ரன் தான் அடித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக நிதீஷ் ரெட்டியை விளையாட வைக்கலாம். அதுதான் சரியான தேர்வாக இருக்கும். நிர்வாகம் இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்வார்கள் என நினைப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு ஸ்பெல் யாருமே போட்டது இல்ல.. பிரசித் கிருஷ்ணா நிகழ்த்திய – மோசமான சாதனை

அவர் கூறியது போன்றே ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுத்து அவருக்கு 6 ஓவர் கொடுப்பதை விட நிதீஷ் ரெட்டியை அணியில் எடுத்தால் ஒரு முழுநேர பேட்ஸ்மேனும் அணிக்கு கிடைப்பார் என்பது மட்டுமின்றி பந்து வீச்சாளராகவும் அவரால் சிறப்பாக செயல்படும் என்பதாலேயே தினேஷ் கார்த்திக் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement