இப்படி ஒரு ஸ்பெல் யாருமே போட்டது இல்ல.. பிரசித் கிருஷ்ணா நிகழ்த்திய – மோசமான சாதனை

Prasidh Krishna
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது லீட்ஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 471 ரன்களை குவித்து ஆட்டமிழக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 465 ரன்களை குவித்தது.

இந்திய வீரராக மோசமான சாதனையை நிகழ்த்திய பிரசித் கிருஷ்ணா :

பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 96 ரன்கள் முன்னிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை பட்டியல் ஒன்றில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் 20 ஓவர்கள் வீசிய அவர் 6.40 என்ற எக்கனாமியுடன் 128 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு 3-4 ரன்கள் மட்டுமே பவுலர்கள் வழங்கி வரும் வேளையில் இந்திய வீரராக மிக மோசமான சாதனையை தற்போது பிரசித் கிருஷ்ணா நிகழ்த்தியுள்ளார். அதாவது இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6-க்கும் மேற்பட்ட எக்கானமியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய வீரராக முரளி கார்த்திக் முன்னிலையில் இருந்தார்.

- Advertisement -

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் போது சிட்னி நகரில் அவர் 6 ரன்களுக்கு மேலான எக்கானமியுடன் 122 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதுவே டெஸ்ட் போட்டிகளில் இந்திய பவுலர் வீசிய ஒரு மோசமான ஸ்பெல்லாக இருந்தது.

இதையும் படிங்க : இப்படி ஒரு வீரரை அவமான படுத்தக்கூடாது.. கேப்டன் சுப்மன் கில் செய்த தவறை – சுட்டிக்காட்டிய தினேஷ் கார்த்திக்

ஆனால் தற்போது அவரது இந்த மோசமான சாதனையை முறியடித்துள்ள பிரசித் கிருஷ்ணா 6.40 என்கிற எக்கானமியில் 128 ரன்கள் விட்டுக் கொடுத்து முரளி கார்த்திக்கின் மோசமான பந்துவீச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement