இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போக தற்போது வர்ணனையாளராக மாறியுள்ள – தமிழக வீரர்

karthik
- Advertisement -

கிரிக்கெட் போட்டியின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டவும், உலகில் பெரும்பாலான மக்களை இப்போட்டியின் மீது கவனம் செலுத்த வைப்பதற்காகவும், ஐசிசி மற்றும் பல்வேறு நாட்டு கிரக்கெட் நிர்வாகங்களும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் முயற்சியாக டி20 ஆட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதற்குப் பிறகு இரவு பகல் டெஸ்ட் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது ஐசிசி. மேலும் ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

INDvsENG

- Advertisement -

இதற்கிடையில் கிரிக்கெட்டை பலதரப்பட்ட மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய கிரிக்கெட் நிர்வாகங்கள் இணைந்து, ஒரு கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்சில் 100 பந்துகளை மட்டும் கொண்ட ஒரு தொடரை ஏற்பாடு செய்திருக்கிறது. தி ஹண்ட்ரட் என்ற பெயர் கொண்ட இத்தொடரில் நடக்கும் போட்டிகளில் வர்ண்ணை செய்ய தமிழகத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் 21ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் கிட்டத்தட்ட 68 போட்டிகள் நடைபெற உள்ளன. ஒரு இன்னிங்சில் 100 பந்துகள் மட்டுமே வீசும்படியாக போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு போட்டி நடைபெற்று முடிய இரண்டரை மணி நேரமே போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் இத்தொடரில் எட்டு ஆண்கள் அணிகளும், எட்டு பெண்கள் அணிகளும் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிகது.

ashwin

இத்தொடரில் பெண்கள் பிரிவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன் ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, மந்தனா உட்பட ஐந்து பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற தொடர் நடைபெற இருப்பதால், இத்தொடரில் நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு சிறந்த வர்ணனையாளர்களை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகம், தற்போது அந்த வர்ணனையாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

Shafali

அதில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருடன் தமிழகத்தின் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்திக்கும் அந்த குழுவில் இடம்பிடித்திருக்கிறார். இதுவரை களத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ஒரு கிரிக்கெட் போட்டிக்கு எப்படி வர்ணனை செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement