பவுலர்க்கு தமிழில் டிப்ஸ் குடுத்த தினேஷ் கார்த்திக். உடனே விக்கெட் வீழ்த்திய பவுலர் – சுவாரசிய தகவல் இதோ

Dk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்து. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் அடித்தார். மேலும் இறுதி நேரத்தில் மோர்கன் சிறப்பாக விளையாடி 34 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த போட்டியில் மிகபெரிய சேசிங்கை செய்த ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 20 ஓவர்களின் முடிவில் அவர்களால் 9 விக்கெட்டுக்களை இழந்த 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரன் சிறப்பாக விளையாடி 54 ரன்களை அடித்தார். மற்றபடி யாரும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. மேலும் அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பாக கொல்கத்தா அணியின் இளம் வீரரான சிவம் மாவி 2 விக்கெட்டுகளையும், நாகர்கோட்டி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் மாகி தேர்வானார்.

mavi 1

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய சில பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது கொல்கத்தா அணியில் விளையாடி வரும் சக்கரவர்த்தியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்பதால் அவர்களுக்கு இடையே தமிழில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கீப்பராக தினேஷ் கார்த்திக் பவுலராக சக்கரவர்த்தியும் இருக்கும் போது ராகுல் திவாதியா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

Chakravarthy

அப்போது சக்கரவர்த்திக்கு பந்துவீச சில டிப்ஸ்களை தமிழில் கூறிய தினேஷ் கார்த்திக் “கரெக்டா இருக்கும் இன்னொரு விக்கெட் எடுத்தா போதும்”, “ரொம்ப வேகமா போடாத”, “நீ போடு அடிச்சா பார்த்துக்கலாம்”, “அடிக்க மாட்டான் போடு” என்று தினேஷ் கார்த்திக் கூறினார். அதன்படியே சக்ரவர்த்தி பந்தில் திவாதியா போல்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அவர் கூறிய இந்த வார்த்தைகள் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement