Dinesh Karthik : பவுலர் மற்றும் பீல்டர் என இவரது செயல்பாடும் திருப்தி இல்லை – கார்த்திக் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Karthik

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Gill

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கார்த்திக் கூறியதாவது : நாங்கள் இன்னும் ஒருநாள் போராட வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணிக்குள் சுமூகமான சூழல் இல்லை கடினமான நாட்களாக இருந்தது. பவுலர்களும், பீல்டர்களின் செயல்பாட்டில் சுத்தமாக எனக்கு மகிழ்ச்சியும், விருப்பமும் இல்லை. அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் அப்படியே விட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். இதுபோன்று நடப்பது அரிதுஎனது கோவத்தை பலர் கண்டிருக்க வாய்ப்பில்லை.

Karthik 1

கடந்த சில போட்டிகளாக கில் துவக்க வீரராக ஆடிவருகிறார். அவருக்கு துவக்க வீரராக இறங்க வாய்ப்பு கொடுத்தோம் அதனை அவர் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டார். மேலும், பந்துவீசிய போது கடைசி ஓவரில் 10 ரன்கள் வரை அதிகமாக கொடுத்து விட்டோம். குரான் நன்றாக ஆடினார். இது பெரிய மைதானம் அதனால் நன்றாக ஓடி ரன்களை சேர்த்தோம். பவுலருக்கு அழுத்தத்தை கொடுத்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது என்று கார்த்திக் கூறினார்.

Advertisement