தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்படவுள்ள ஆபத்து : தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படுகையில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்த தமிழக வீரரான சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டு அவரது இடத்தில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் முழுநேர பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு ஆல்ரவுண்டரை அந்த இடத்தில் விளையாட வைப்பது சரியானது தானா? என்ற விவாதம் இருந்தது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது அவருக்கு தான் ஆபத்து என்று தனது கருத்தினை முன்னாள் இந்திய வீரரும், தமிழக முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளார்.
குறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் கிடையாது. அவர் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டர் எனவே அவரை மூன்றாம் இடத்தில் களமிறக்கினால் அது அவருக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் மூன்றாம் இடத்தில் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் விளையாட வேண்டியது அவசியம்.
ஆனால் அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தரை தொடர்ந்து களமிறக்கினால் அவர் தன்னுடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவர் பேட்டிங் பயிற்சியை மட்டுமே மேற்கொள்வார். இதனால் அவரது பந்துவீச்சில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று அவர் பேட்டிங்கிற்காக நிறைய நேரம் பயிற்சி செய்கையில் பந்துவீச்சிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : கம்பீர் நினைச்சதை செய்ய இது ஒன்னும் டி20 இல்ல.. அடிக்கடி மாத்துனா எப்படி ஜெய்க்க முடியும்.. அஸ்வின் விமர்சனம்
அதனால் அவரை வழக்கமான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பயன்படுத்தி பின் வரிசையில் களமிறக்கினால் தான் அது அவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது. இல்லையெனில் அவரது ப்ரமோஷன் காரணமாக பந்துவீச்சு பாதிப்படையலாம் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.



