கம்பீர் நினைச்சதை செய்ய இது ஒன்னும் டி20 இல்ல.. அடிக்கடி மாத்துனா எப்படி ஜெய்க்க முடியும்.. அஸ்வின் விமர்சனம்

R Ashwin 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த மோசமான பிட்ச் முக்கிய காரணமானது. அது போக திடீரென சாய் சுதர்சன் கழற்றி விடப்பட்டு 3வது இடத்தில் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியதும் தோல்விக்கு காரணமானதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

பேட்டிங்கில் அசத்திய சுந்தர் பந்து வீசாததால் 4 ஸ்பின்னர்கள் எதற்கு? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்யும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் தேர்வுகள் தோல்வியை கொடுப்பதாகவும் அஸ்வின் விமர்சித்துள்ளார். மேலும் 3வது இடத்தில் வீரர்களை அடிக்கடி மாற்றினால் எப்படி இந்திய அணியின் வருங்காலம் சிறப்பாக அமையும்? என்றும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

டி20 போல மாற்றங்கள்:

இது அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சாய் சுதர்சன் போன்ற நல்ல வீரருக்காக நான் கவலைப்படுகிறேன். அணியிலிருந்து நீக்கப்பட்ட பின் அவர் என்ன நினைத்திருப்பார்? ஒரு அணியில் 4 ஸ்பின்னர்கள் விளையாடுவது அதிகம் என்று நான் நினைத்திருக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் 2வது இன்னிங்ஸில் ஒரு பந்தை கூட போடவில்லை. நீங்கள் விளையாட வைத்த 4 ஸ்பின்னர்களில் ஒருவர் ஒரு பந்தை கூட போடவில்லை”

“டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஆல் ரவுண்டர்களை விளையாட வைப்பதன் காரணத்தை நான் அறிவேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பெசலிஸ்ட் வீரர்களை தேர்ந்தெடுப்பது மட்டுமே வேலை செய்யும். இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல முயற்சிக்கும் நிலையில் இந்தப் புள்ளிகள் முக்கியமானது. இனிமேல் ஃபைனலில் தான் டாஸ் வெல்வேன் என்று சுப்மன் கில் ஜாலியாக தெரிவித்திருந்தார்”

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்:

“ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஃபைனலுக்கு செல்ல வேண்டும். கொல்கத்தா தோல்வி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. அதே போல திறமையான சுந்தரை 3வது இடத்தில் விளையாட வைத்த முடிவு சரியானதா? என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஏனெனில் தற்போது தோல்வியை சந்தித்ததால் நாம் ஏமாற்றத்தில் நிறைய விஷயங்களைப் பேசுவோம்”

இதையும் படிங்க: பயமற்ற பாகிஸ்தான் இந்தியாவை ஓடவிட்டதை மறக்க மாட்டேன்.. பெருமை பாடிய நக்வி.. ரசிகர்கள் பதிலடி

“புதிய முடிவுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அதே சமயம் சாய் சுதர்சனுக்கு நல்ல வருங்காலம் இருக்கிறது. நீங்கள் அணியை உருவாக்க விரும்பினால் 3வது இடத்தில் விளையாடுபவரை சுற்றி முடிவுகளை எடுக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாசிங்டன் சுந்தரை அங்கு விளையாட வைக்க நினைத்தால் அவருக்கு அங்கேயே சில வருடங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 3வது இடத்தில் விளையாடும் வீரரை சூழ்நிலைகளுக்காக அடிக்கடி மாற்றக்கூடாது” என்று கூறினார்.

Advertisement