ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எங்களது சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்து. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

kkr vs rr

அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் அடித்தார். மேலும் இறுதி நேரத்தில் மோர்கன் சிறப்பாக விளையாடி 34 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த போட்டியில் மிகபெரிய சேசிங்கை செய்த ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 20 ஓவர்களின் முடிவில் அவர்களால் 9 விக்கெட்டுக்களை இழந்த 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரன் சிறப்பாக விளையாடி 54 ரன்களை அடித்தார். மற்றபடி யாரும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. மேலும் அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பாக கொல்கத்தா அணியின் இளம் வீரரான சிவம் மாவி 2 விக்கெட்டுகளையும், நாகர்கோட்டி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் மாவி தேர்வானார்.

gill

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : நான் இந்த போட்டியை சிறப்பான போட்டியாக கருதவில்லை. நாங்கள் இன்னும் நிறைய இடங்களில் முன்னேற வேண்டியுள்ளது. இந்த போட்டியில் சுப்மான் கில் மற்றும் ரசல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோன்று இளம் வீரரான சிவம் மாவி அருமையாகப் பந்து வீசினார்.

mavi

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மிக உயர கேட்சிகளை அபாரமாக பிடித்தனர். ஆர்ச்சர் சிறப்பாக வீசினார். மேலும் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு எளிதானது அல்ல. இந்த மைதானத்தில் டேட்டிங் என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ரன்களை குவித்ததால் எங்களால் அவர்களை அழுத்தத்தில் வைத்து வெற்றி பெற முடிந்தது என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement