Dinesh Karthik : ஒரு தவறான ஷாட்க்காக காத்திருந்தேன். அதுவே வெற்றிக்கு காரணம் – தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோஹித் சர்மா தலைமை

karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Karthik

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் நேற்று மாத்தி மாத்தி அடித்து துவைத்தனர். கில் 45 பந்துகளில் 76 ரன்களையும், லின் 29 பந்துகளில் 54 ரன்களையும், ரசல் 40 பந்துகளில் 80 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் வந்த ஹார்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்தார். அதனால் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Russell

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : இந்த போட்டி அருமையான ஒன்றாகும். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவினை அளித்தனர். ரசல் எங்கள் அணியின் சிறப்பான வீரர். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் நாளுக்கு நாள் மெருகேறியபடி உள்ளார். அவரின் அபார ஆட்டம் அதிக அளவு ரன்களை குவிக்க உதவியது. அதேபோன்று கில் மற்றும் லின் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.

Hardik

மும்பை அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஹார்டிக் பாண்டியா சிறப்பாக ஆடி அச்சுறுத்தினார். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் இதுபோன்ற பெரிய இலக்கு போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஒரு தவறு செய்தால் போதும் ஆட்டம் நம் கைக்கு வந்துவிடும் தற்போது அதுவே நடந்தது. பாண்டியா விக்கெட் வீழ்ந்ததும் எங்கள் அணியின் வெற்றி உறுதியானது.

Advertisement