ஆக்ரோஷத்தை வெளியில் காண்பிக்க மாட்டாரு. ஆனா ஜெயிக்கிற வெறி இவர்கிட்ட ரொம்ப அதிகம் – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்க உள்ளது. மும்பை அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணி குழு சென்னைக்கு இடமாற்றம் மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வலைப்பயிற்சிக்கு முன்பு தங்களது குவாரன்டைனை மும்பையில் வைத்து தொடங்கியுள்ளது.குவாரன்டைன் முடிந்த பின்னர் கொல்கத்தா அணி வலைப்பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பற்றி சில வார்த்தைகள் கூறி இருக்கிறார்.

ரோகித் சர்மா முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் போல வெற்றி வெறி பிடித்தவர்.தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றியை பெற முழுமையாக போராடுவார். வெற்றி கிடைக்க மிகுந்த கோபத்துடன், வெறியுடன் தனது பங்களிப்பை கொடுப்பார். ஆனால் வெளியே இருந்து பார்ப்பதற்கு அவர் மிக அமைதியாக இருப்பது போல் தெரியும்.

kkrvsmi

இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இதுபோல தான் வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் சாமானிய வீரராக மிக அமைதியாக நடந்துகொள்வார். ஆனால் உள்ளுக்குள் வெற்றி பெற வேண்டும் என வெறியுடன் ஒவ்வொரு போட்டியையுமே அணுகுவார். உண்மையில் அவர் ஒரு கோபக்காரர் , தன் கோபத்தை முழுவதுமாக போட்டியில் தனது பெர்ஃபார்மன்சில் காண்பித்து விடுவார். அதை தான் தற்பொழுது இந்திய அணியில் ரோகித் சர்மா செய்து வருகிறார் என்று தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்தார்.

mi

ரோகித் சர்மா இதுவரை 8 ஐபிஎல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 முறை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குச் சென்று விட்டாலே நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement