இவரோட அதிரடியை எங்களால் கன்ட்ரோல் பண்ணவே முடியல. அதுவே தோல்விக்கு காரணம் – தினேஷ் கார்த்திக் வருத்தம்

Karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKKR

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். துவக்க வீரர்களான பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் முறையே 47 மற்றும் 32 ரன்களை குவித்தனர் .அதன்பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 34 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்றவர்கள் யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க.து பெங்களூர் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நான்கு ஊர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

rcb

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : டிவில்லியர்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த பிளேயர். அவரை தடுத்து நிறுத்துவது என்பது இதுபோன்ற மைதானங்களில் நடக்காத ஒரு காரியம். இன்றைய போட்டியின் முடிவில் அவரது இன்னிங்ஸ் மட்டுமே இரு அணிகளின் முடிவையும் மாற்றியதாக நான் கருதுகிறேன். இந்த தோல்விக்கு பிறகு நாங்கள் சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

- Advertisement -

எந்தெந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டுமோ அதனை கொண்டு வரவேண்டும். இன்றைய போட்டியில் எங்களது அணியின் பேட்டிங் சற்று பலவீனமாக காணப்பட்டது. இனிவரும் போட்டிகளில் அதை முன்னேற்ற நாங்கள் முயற்சிப்போம். மூன்று நாட்கள் இடைவெளி இருந்ததால் இந்த போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியோடு தான் விளையாடினோம். இருப்பினும் ஐபிஎல் போன்ற சுவாரசியமான தொடர்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் வரத்தான் செய்யும்.

abd

முதலில் இந்த போட்டியில் பேட்டிங் செய்து இருந்தால் அது எங்களுக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ஒரு கேப்டனாக அனைத்து போட்டிகளும் திட்டமிட்டபடியே ஆட்டம் செல்லாது. எங்களின் கடினமான நாட்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது குறித்து அதிகமாக நான் கவலைப்படப் போவதில்லை என்று தினேஷ் கார்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement