இயான் மோர்கனிடம் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க இதுவே காரணம் – மனம்திறந்த கார்த்திக்

Morgan
- Advertisement -

14வது ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. சென்ற வருடம் தொடரின் பாதியில் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தானாக அந்த பொறுப்பை தொடர்ந்தார்.

karthik 2

- Advertisement -

அவருக்கு பதில் இயான் மோர்கனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் இரண்டு வருடங்களாக தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக இருந்தார். ஆனால் பெரிதாக தன்னை நிரூபிக்க முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு மட்டும் இவரது தலைமையில் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருந்தது. இந்நிலையில் திடீரென தனது கேப்டன் பொறுப்பை இயான் மோர்கன்னிடம் ஒப்படைத்தது ஏன் என்று தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

இதுகுறித்து அவர் பேசுகையில்… கடந்த ஆண்டு நான் இயான் மோர்கன்னுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். 7 போட்டிகளில் விளையாடி முடித்து இருந்தாலும். அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற வைக்க எங்களிடம் மீதம் 7 போட்டி மட்டுமே இருந்தது. அப்போது நான் அணியை மோசமாக வழி நடத்துகிறேன் என்று எனக்கு தெரிந்தது.

karthik

மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்று நினைத்திருந்தேன். என்னைப் பொறுத்த வரையில் இது போன்ற செயல்கள் நியாயமற்றது. இரண்டரை வருடங்களாக அணியை வழி நடத்தி இருக்கிறேன். என் மீது வீரர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இயான் மார்கன் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

morgan

இருவரும் சேர்ந்து அணியை சிறப்பாக வழிநடத்தவே இந்த முடிவினை எடுத்தேன் என்று தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். தற்போது தினேஷ் கார்த்திக் துணை கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement