இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே கான்பரா நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் மழை பெய்ததன் காரணமாக போட்டி பாதியிலேயே தடைப்பட்டது.
ஹர்ஷித் ராணாவுக்கு இதுதான் ரோல் : தினேஷ் கார்த்திக்
அதனால் அந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது அக்டோபர் 31-ம் தேதியான இன்று மெல்போன் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஆனால் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
முதல் போட்டி சென்றவரை இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தது. அதனால் என்னை கேட்டால் இன்றைய இரண்டாவது போட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெற மாட்டார்.
அதனால் நிச்சயம் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணாவை தான் இந்திய அணி பயன்படுத்த நினைக்கும். ஏனெனில் அவரை தற்போதைய இந்திய அணியின் நிர்வாகம் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கிறது. எனவே எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வீரராக அவரே இருப்பார். அதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 15க்கு 15 ஆஸியின் உலக சாதனையை உடைத்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. வரலாறு காணாத சாதனை வெற்றி
அதேபோன்று இந்த இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது டி20 போட்டியானது இன்று மெல்போர்ன் நகரில் மதியம் 1:45 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



