ஹார்டிக் பாண்டியா தலைகீழ நின்னாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh-Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 86 ஒருநாள் போட்டிகள், 102 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் பாண்டியா இதுவரை 137 போட்டிகளில் விளையாடியது மட்டுமில்லாமல் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார்.

ஹார்டிக் பாண்டியாவால் முடியாது :

அதிரடியான பேட்ஸ்மேனாக திகழும் பாண்டியா வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியர் என்பதனால் நட்சத்திர ஆல்ரவுண்டராக இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடுகிறார். ஆனாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை விளையாடவில்லை.

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமான ஹார்டிக் பாண்டியா வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் பின்பு தனது உடற்பகுதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இதுவரை திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாகவே ரெட் பாலில் அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கூறுகையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவின் உடற்தகுதி பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரால் ரெட்பால் பக்கம் நிச்சயமாக திரும்பி வர முடியாது. ஒருவேளை தனது உடற்தகுதியை அவர் முன்னேற்றிக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் வந்தால் அதை நான் ஆச்சரியமாக பார்ப்பேன். என்னை பொறுத்தவரை ஹார்திக் பாண்டியாவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடியாது.

இதையும் படிங்க : 420 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளேவை முந்திய அஸ்வின்.. ஆசிய கண்டத்தின் இந்திய நாயகனாக மாபெரும் சாதனை

இருப்பினும் அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு சாதகம் தான். என்னை பொறுத்தவரை தற்போது ஷர்துல் தாகூர், நித்திஷ் குமார் ரெட்டி, சிவம் துபே ஆகியோருக்கு அந்த தகுதி உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement