கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வருபவர் ஆன்ட்ரே ரசல். அதே நேரத்தில் கடந்த மூன்று வருடங்களாக தினேஷ் கார்த்திக் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த வருடம் தினேஷ் கார்த்திக்கின் தலைமை பண்பு குறித்த விமர்சித்துப் பேசி தனக்கு சரியான வாய்ப்புகளை கொடுக்காமல் தினேஷ் கார்த்திக் தட்டிப் பறிக்கிறார் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக மோதல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொல்கத்தா அணியில் எத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் எத்தனை ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது அணிக்கு பயனளிக்காது என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்த மோதல் கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அந்த கட்டத்தில் தினேஷ் கார்த்திக் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த சண்டை குறித்து தற்போது தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழக வீரர் அஸ்வின் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்து பேசியிருக்கிறார். மேலும் அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று அஸ்வின் தினேஷ் கார்த்திக் இடம் கேட்டார். அதற்கு பதில் கொடுத்த தினேஷ் கார்த்திக் நீங்கள் அவருக்கு பந்துவீசவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
அவர் என்ன செய்கிறார் என்று கணிக்க முடியாது. பந்து வீசுவதற்கு முன்னர் கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்,அதன் பின்னர் காணிக்கை செலுத்த வேண்டும், கடவுள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்,அதன் பின்னர் ரசல் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் அடுத்து மைதானம் கைகொடுக்க வேண்டும்.
இப்படி இருந்தால் தான் அவரது விக்கெட்டை எடுக்க முடியும். ரசல் பேட்டிங் செய்ய வருவதைப் பார்த்தாலே பயமாக இருக்கும் ஏதோ ஒரு மல்யுத்த வீரர் வருவதைப்போல் வருவார். அதே நேரத்தில் நல்ல குணம் கொண்டவர். பல விஷயங்களுக்கு எளிதில் பயந்து விடுவார் குழந்தை போன்றவர் என்று தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.