கம்பீர் எடுத்த இந்த முடிவு எனக்கு பிடிக்கல.. விராட் கோலி விடயத்தில் அவர் செய்தது தவறு – தினேஷ் கார்த்திக்

DK
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வீரரான சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கழுத்து வலி காரணமாக பாதிக்கப்பட்டதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் விளையாடுவதாக கேப்டன் ரோகித் சர்மா டாசின் போது அறிவித்திருந்தார்.

விராட் கோலி விடயத்தில் கம்பீர் செய்தது தவறு :

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் சுப்மன் கில் களமிறங்கும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் நான்காவது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு திடீரென மூன்றாவது இடத்தினை வழங்கியது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் கே.எல் ராகுல் போன்ற மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் இருந்தும் அவரை டாப் ஆர்டரில் விளையாட வைக்காமல் விராட் கோலியை முன்கூட்டியே அனுப்பி அவரது விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கம்பீரின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தமிழக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி மிகவும் பாராட்டுக்குரியவர். அவர் நினைத்திருந்தால் கே.எல் ராகுல் அல்லது சர்ஃபராஸ் கானை மூன்றாவது இடத்தில் விளையாட சொல்லி இருக்கலாம்.

- Advertisement -

ஆனால் அணியின் நலனுக்காக அவரே முன்வந்து தான் மூன்றாவது இடத்தில் விளையாடுவதாக பயிற்சியாளரிடம் கூறியிருக்கிறார். ஆனாலும் கம்பீர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில் விராட் கோலி வழக்கமாக விளையாடும் நான்காவது இடத்தில் அவரது சிறப்பான செயல்பாடு அமைந்துள்ளது. எனவே வேறு யாராவது ஒரு வீரரை மூன்றாவது இடத்தில் களமிறக்க முயற்சி செய்திருக்கலாம்.

இதையும் படிங்க : 18 பந்தில் 48 ரன்ஸ்.. லீட் 299.. இனிமேல் ஜெய்க்க வாய்ப்பில்லை.. இந்தியாவுக்கு எதிராக ரவிந்தரா 12 வருட அபார சாதனை

இந்த விடயத்தில் கம்பீரின் திட்டம் எனக்கு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டியது அவசியம். எனவே சரியான வீரரை சரியான இடத்தில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement