Dinesh Karthik : இவரே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பரித்தார் தோல்வி குறித்து – தினேஷ் கார்த்திக் பேட்டி

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Dinesh
- Advertisement -

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Kohli 1

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் : இந்த போட்டியில் மொயின் அலி சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது அபார ஆட்டமே எங்களது வெற்றியை பறித்தது. மேலும் நாங்கள் 20-25 ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டோம் . கோலி இப்படி சிறப்பாக விளையாடும்போது ரன்கள் வரத்தான் செய்யும். சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் கைகொடுக்கவில்லை.

Rcb

இன்றைய போட்டியில் பெங்களுரு அணி சிறிய விடயங்களை கூட சரியாக செய்தது அதனாலே அந்த அணி வெற்றி பெற்றது. இருப்பினும் எங்களது அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது அடுத்த போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடி அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement