IND vs WI : தடுமாறிய இந்தியாவை வெற்றிபெற வைத்த டிகே – தோனியை முந்தி படைத்த அசத்தல் சாதனைகள் இதோ

MS Dhoni vs DInesh Karthik
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டி ஜூலை 29-ஆம் தேதியான நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மாவுடன் ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (16) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் நிலைமையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட்டாகி ஏமாற்ற மிடில் ஆர்டரில் வந்த ரிஷப் பண்ட் 14 (12) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 1 ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

Rohit Sharma Six

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் பொறுப்புடனும் அட்டகாசமாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 64 (44) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே அதிரடி காட்ட முயன்ற ரவீந்திர ஜடேஜாவும் 16 (13) ரன்களில் அவுட்டானார். அதனால் 160 ரன்களை தாண்டுமா என இந்திய ரசிகர்கள் கவலையடைந்தபோது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் கடைசி கட்ட ஓவர்களில் தனக்கே உரித்தான பாணியில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

காப்பாற்றிய டிகே:
அவருக்கு மற்றொரு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 13* (10) ரன்கள் எடுத்து கம்பெனி கொடுத்ததை பயன்படுத்திய தினேஷ் கார்த்திக் 7-வது விக்கெட்டுக்கு கடைசி 4 ஓவர்களில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 190/6 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15 (6) சமர் ப்ரூக்ஸ் 20 (15) என அதிரடி காட்டிய தொடக்க வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Dinesh Karthik Ashwin

அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய தங்களது அணியை மிடில் ஆர்டரில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 (15), ரோவ்மன் போவல் 14 (17), சிம்ரோன் ஹெட்மையர் 14 (15) என முக்கிய பேட்ஸ்மேன்களும் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அஷ்வின், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்தாலும் கடைசி நேரத்தில் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் அபாரமாக பேட்டிங் செய்து 41* (19) குவித்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிலும் இப்போட்டியில் முதல் 12 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அடுத்த 7 பந்துகளில் 24 ரன்களை தெறிக்கவிட்டு தனது தரத்தை நிரூபித்தார்.

Dinesh Karthik 1

ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்ட இவரின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைத்த வேளையில் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் சொல்லி அடித்த தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் இதுவரை களமிறங்கிய 10 இன்னிங்சில் 166* ரன்களை (4 நாட்-அவுட்) 147.8 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ள அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

சூப்பர் சாதனைகள்:
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்கு பின் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 வெவ்வேறு நாடுகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ரோகித் சர்மா (7) உள்ளார்.

Dinesh-Karthik

அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 7-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 94*, 2022
2. எம்எஸ் தோனி : 76, 2012
3. யூசுப் பதான் : 75, 2009

- Advertisement -

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5-வது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி உலகிலேயே அதிக பட்சமாக 5 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் அவர் தனித்துவமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. 41* (19), வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022
2. 55 (27), தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2022
3. 33* (16), நியூசிலாந்துக்கு எதிராக, 2019
4. 30 (13), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018
5. 29* (8), வங்கதேசத்துக்கு எதிராக, 2018

இதையும் படிங்க: IND vs WI : தன்னை முந்திய கப்டிலை ஒரே நாளில் முந்தி உலகசாதனை படைத்த ரோஹித் – கோலி, தோனியையும் முந்தி புதிய சாதனை

மேலும் 37 வயதுக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 167*
2. எம்எஸ் தோனி : 130
3. ராகுல் டிராவிட் : 31

Advertisement