- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்குள்ள பழசை மறந்து அவங்கள ரிட்டையராக சொல்லாதீங்க.. இதை செய்லனா சொல்லுங்க.. டிகே பேட்டி

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதே போல அஸ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததும் தோல்வியை கொடுத்தது.

எனவே 36 வயதை சராசரியாக கடந்து விட்ட அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்திய ரசிகர்களை விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஒரு தோல்வியால் இதுவரை வெற்றி நாயகன்களாக செயல்பட்டவர்களை ஓய்வு பெற சொல்லக்கூடாது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

டிகே கோரிக்கை:

மேலும் இங்கிலாந்து மண்ணில் 2025 ஜூன் மாதம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. அந்த 10 போட்டிகளில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில் ரசிகர்கள் சொல்வது போல கழற்றி விடப்படுவதற்கு தகுதியானவர்கள் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி அவர் கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“அதற்குள் ஏன் அவசரம் பாஸ்? ஒரு மோசமான தொடரால் உடனடியாக தலைகள் பற்றி அழைக்கலாமா. நான் அப்படி நினைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை எனில் பின்னர் நாம் இந்த கேள்வியை கேட்கலாம். அப்போது இந்த கேள்வியை கேட்கும் போது அது நியாயமாகவும் இருக்கும். தற்போதைய நிலையில் அவர்களை ஒன்று சேர்ப்பது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

நட்சத்திர வீரர்கள்:

“தோல்விக்கு அனைத்துமே காரணமாக அமைந்தது. நம்முடைய பவுலிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நம்முடைய ஸ்பின்னர்களுக்கு நியூசிலாந்து தொடர் சிறப்பாக அமையவில்லை. சந்தேகமே இல்லாமல் நம்முடைய பேட்டிங் ஸ்பின்னர்களுக்கு எதிராக மோசமாக இருந்தது. உலக அளவில் டி20 போன்ற வெள்ளைப் பந்து போட்டிகள் அதிகமாக நடைபெறுவதால் நம்முடைய தடுப்பாட்டம் குறைந்து போயுள்ளது”

இதையும் படிங்க: அவ்ளோ பெரியாளா ஆகிட்டீங்களா? மன்னிப்பு கேட்டும் அல்சாரி ஜோசப்புக்கு தடை விதித்த வெ.இ

“அதையும் தாண்டி ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அதிகமாகவே தடுமாறுகிறார்கள்” என்று கூறினார். இந்த நிலைமையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. எனவே அந்தத் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -