ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் குவிண்டன் டிகாக்க்கு எதிராக வருண் சக்கரவர்த்தி பந்து வீசுகையில் அவரை நோக்கி மோசமாக தினேஷ் கார்த்திக் திட்டிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி டிக்காக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்தை வீசிய வருண் சக்கரவர்த்தியை நோக்கி தினேஷ் கார்த்திக் “என்ன மயிறு பந்து” இது என்று திட்டுகிறார்.
அந்த ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் இந்த தினேஷ் கார்த்திக்கின் செயலுக்கு விமர்சனங்களையும் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.