இந்திய அணியின் இளம் வீரரான இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

Karthik

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி சவுதாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் உடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் கலந்துகொண்டு வர்ணனை செய்ய உள்ளார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அவர் சமூக இணையத்தின் வாயிலாக பல பேட்டிகளை அளித்து வருகிறார்.

karthik 1

இந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் இளம் வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் குறித்து பாராட்டி பேசிய பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில மாதங்களாகவே ரிஷப் பண்ட் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இக்கட்டான வேளையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அது உலக கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியாக இருந்தாலும் சரி சவாலான நேரத்தில் விளையாடுவதற்கு அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவரை இக்கட்டான வேளையிலும் சிறப்பாக செயல்பட வைக்கிறது என்று கூறியுள்ளார்.

Pant

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : இரண்டு ஆண்டுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் தனியாளாக நின்று டெல்லி அணிக்கு எலிமினேட்டர் சுற்றில் வெற்றியை தேடிக் கொடுத்தார். அதேபோன்று நெருக்கடியான நேரங்களில் ரன் சேர்த்து வருகிறார். நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பிரகாசிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Pant

என்னைப் பொறுத்தவரை நிச்சயமாக அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 33 டி20 போட்டிகள், 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement