கோஹினூர் வைரத்தை விட.. அவர் தான் இந்தியாவின் மதிப்பான பிளேயர்.. தினேஷ் கார்த்திக் பாராட்டு

Dinesh Karthik 2
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று அசத்தியது. கடைசியாக 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் வென்ற இந்தியா தற்போதைய வெற்றியையும் சேர்த்து 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி முக்கிய பங்காற்றினார்.

முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய அவர் முக்கியமான இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்த விராட் கோலி இந்தியாவின் கோஹினூர் வைரத்தை போன்ற மதிப்புடைய வீரர் என்று நவ்ஜோத் சித்து பாராட்டினார். இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியின் மதிப்புமிக்க என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கோகினூர் வைரம்:
ஏனெனில் தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து அசத்தி வருவதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இறுதிப் போட்டியின் வர்ணனையில் இருந்த போது அவரை நான் கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று சொல்லியிருந்தேன்”

“உண்மையில் உலக கிரிக்கெட்டில் அவர் தற்போது ஆல் ஃபார்மட் பவுலராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார். அதை இங்கே பலரும் செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும் எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய ஸ்பெஷலாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களாகவே பும்ரா தன்னுடைய தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் இந்தத் தொடரில் 15 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்நாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: பாண்டியா, சூர்யகுமார் கிடையாது.. ரோஹித் சர்மாவுக்கு பின் அவர் தான் சரியான டி20 கேப்டன்.. சேவாக் கருத்து

அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்நாயகன் விருது வென்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்தார். அதன் காரணமாக வாசிம் வாசிம், வகார் யூனிஸ் போன்ற பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் தொடர்ந்து பும்ராவை பாராட்டி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

Advertisement