ஜிம்பாப்வே தொடரில் ஜாம்பவான்கள் ரோஹித், கோலி இடத்தில் விளையாடப் போவது யார்? கேப்டன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வழக்கம் போல இம்முறையும் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து சீனியர் இந்திய வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மாவை தாண்டி ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் போன்ற சீனியர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்குகிறது. எனவே இளம் வீரர்களுடன் இந்தியா இத்தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

கில் அறிவிப்பு:
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மாவின் இடத்தில் அபிஷேக் ஷர்மா விளையாடுவார் என்று கேப்டன் கில் அறிவித்துள்ளார். அதே போல நீண்ட காலமாக 3வது இடத்தில் ராஜாங்கம் நடத்திய விராட் கோலியின் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“என்னுடன் அபிஷேக் ஷர்மா ஓப்பனிங் வீரராக விளையாடுவார். ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார். என்னுடைய ஐபிஎல் அணிக்கு முதல் முறையாக கேப்டனாக வந்த போது என்னைப் பற்றியும் கேப்டன்ஷிப் பற்றியும் நிறைய அம்சங்களை தெரிந்து கொண்டேன். கேப்டனாக இருக்கும் போது மனதளவில் நீங்கள் அதிக சவாலை எதிர்கொள்வீர்கள் என்பதை உணர்கிறேன்”

- Advertisement -

“உலகக் கோப்பை வென்ற அணியை விட இது கொஞ்சம் வித்தியாசமானது. இதில் நான் உட்பட நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை எங்கள் வீரர்களுக்கு கொடுப்போம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எங்களின் நிறைய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியதில்லை. சிலர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் கூட அறிமுகமானதில்லை”

இதையும் படிங்க: இந்தியா – ஜிம்பாப்வே தொடர் நடக்கும் ஹராரே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“எனவே எங்கள் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டின் அனுபவத்தையும் வாய்ப்பையும் கொடுப்பதே இந்த தொடரின் இலக்காகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா ஜூலை 6ஆம் தேதி விளையாடுகிறது. அப்போட்டி ஜிம்பாப்வே நாட்டிலுள்ள ஹராரே மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement