கொல்கத்தா அணியில் இருக்கும் இவர்தான் உண்மையில் உலகின் நம்பர் 1 பவுலர் – தினேஷ் கார்த்திக் பெருமிதம்

karthik

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dubai

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தங்களது அணி குறித்து சில விடயங்களை வலைதளத்தில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் இந்த வருட வீரர்களின் தேர்வு மற்றும் வீரர்களின் ஏலம் ஆகியவற்றை குறித்து தனது கருத்தை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் அளித்த பேட்டியில் கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தான் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். எங்கள் அணியில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் ஒருவர் இருக்க வேண்டும் என நினைத்தோம் அப்படிப் பார்க்கையில் பேட் கம்மின்ஸ் தான் தற்போதைய உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

Cummins

சமகால கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் தான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவரைப் போன்ற பவுலர் அணியில் இருக்கும் போது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு உத்வேகத்தையும், பலத்தையும் கொடுக்கும் பந்துவீச்சில் மட்டுமல்ல பழகுவதற்கும் அவர் இனிமையானவர் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Cummins 2

மேலும் துவக்க வீரரான கிறிஸ் லின்னை கனத்த இதயத்துடன் தான் அணியில் இருந்து நீக்கியுள்ளோம். அது எங்கள் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புதான் இருப்பினும் அவரின் இழப்பினை ஈடு செய்யும் விதமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இணைந்துள்ளது எங்கள் அணிக்கு கிடைத்த பலம் என்று கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.