வேற கிரகத்துல இருந்து வந்தவரு மாதிரி என்னமா பேட்டிங் பண்றாரு – இளம்வீரரை புகழ்ந்த தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்து 3 க்கு 0 என்ற கணக்கில் வாஷ் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடிய ஒரு இளம் வீரரை இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து பேசியுள்ளார்.

pant4

- Advertisement -

அதன்படி முதல் இரண்டு ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்த சூரியகுமார் யாதவிற்கு மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்தார். இன்னும் சிறிது நேரம் நின்று இருந்தால் நிச்சயம் பெரிய ரன் குவிப்பிற்கு சென்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் போல் விளையாடுகிறார். அவரது ஷாட் மற்றும் அவரது பேட்டிங் பொசிஷன் என அனைத்துமே வேறு மாதிரி உள்ளது. அவர் பேட்டிங்கை எந்த ஒரு சூழ்நிலையிலும் மிக எளிதாக கையாளுகிறார். நிச்சயம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்காக பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டுவார்.

sky

என்னைப் பொறுத்தவரை தற்போது உள்ள இந்திய அணியில் அவருக்கு நீண்ட நாட்கள் விளையாடும் வாய்ப்பை தரவேண்டும். அப்படி அளிக்கும் பட்சத்தில் இந்திய அணியை சிறப்பாக முன்னிறுத்தி அவரால் கொண்டு செல்ல முடியும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சூர்யகுமார் யாதவ் எந்த இடத்தில் இறங்கினாலும் அதிரடியை கையாளும் திறமை உடையவர்.

- Advertisement -

அவர் மூன்றாவது இடத்தில் இறங்கினாலும் சரி, 4,5 அல்லது 6 ஆவது இடத்தில் இறங்கினாலும் சரி ஒரே டெம்போவில் அவரால் விளையாட முடிகிறது. நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் கூடுதலான வாய்ப்புகள் கொடுக்கவேண்டும்.

இதையும் படிங்க : ராகுல் தலைமையிலான லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்ன பெயர் தெரியுமா?

ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு வரும் வேளையில் அவருக்கு 6-வது இடத்தையும் சூரியகுமார் யாதவிற்கு ஐந்தாவது இடத்திலும் விளையாட வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே என்னுடைய கருத்து என்று கூறினார். மேலும் சூரியகுமார் யாதவ் போன்று பயமின்றி பந்துகளை எதிர்கொண்டு விளையாட தற்போதுள்ள இந்திய அணியில் நிச்சயம் ஒரு வீரர் அவசியம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement