இவரோட பேட்டிங்கை பாத்தா சேவாக்கையோ, கில்கிறிஸ்டயோ பார்த்த மாதிரி இருக்கு – தினேஷ் கார்த்திக் புகழாரம்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சக்கட்ட பார்மில் தற்போது விளையாடி வருகிறார். மூன்றுவகையான கிரிக்கெட்டிலும் கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்கு பல வெற்றிகரமான இன்னிங்ஸ்களை அவர் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் மிக முக்கியமான நம்பிக்கை நட்சத்திரமாகவும், தவிர்க்க முடியாத வீரராகவும் மாறிவருகிறார். அவருடைய சமீபத்திய பேட்டிங் பார்ம் உச்சத்தில் உள்ளது.

Pant

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. 23 வயதான ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். மோசமான பார்ம் காரணமாக அணிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த இவர் தற்போது இந்திய அணியில் நிரந்தர வீரராக விளையாடி வருகிறார்.

2019ஆம் ஆண்டு அவரது கரியரில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்த ரிஷப் பண்ட் அதன்பிறகு தனது கடினமான பயிற்சியின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு மிகப்பெரிய வீரராக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட்டைப் பாராட்டி இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pant 1

ரிஷப் பண்ட் இன் ஆட்டம் கில்கிறிஸ்ட் மற்றும் சேவாக் ஆகியோர் விளையாடியதைப் போன்றே இருக்கிறது. அவரால் இந்திய அணிக்காக சிறப்பான ஒரு பலத்தை அளிக்க முடிகிறது. அவர் அணியில் விளையாடும் போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ள முடியும். மேலும் அவரது பயமில்லாத ஆட்டம் எதிரணியை அச்சுறுத்துவதாக உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

pant 1

2018 ஆம் ஆண்டு நாட்டிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்துடன் நடைபெறவிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் அவர் விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement