நான் படிச்ச ஸ்கூல்ல அவர்தான் முதல் மாணவர். அவர்தான் பெஸ்ட் – தினேஷ் கார்த்திக் புகழாரம்

Karthik
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 38-ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், தமிழக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

karthik

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணி கோப்பையை கைப்பற்ற 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று பலரும் கூறியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியின் பயணமும் என்னுடைய பயணமும் வேறு வேறு. நான் படிக்கின்ற பல்கலைக்கழகத்தில் தோனி தான் மிகச் சிறந்த மாணவர். அதனால் அவரோடு என்னை ஒப்பிடுவது நியாயமற்றது.

Karthik

நிறைய இளைஞர்களுக்கு அவர் உந்து சக்தியாக இருக்கிறார். அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும். நான் அடித்த அந்த கடைசி பந்தில் சிக்சர் இல்லாமல் போயிருந்தால் ஆட்டம் சூப்பர் வரை போயிருக்கும் ஆனால் அப்படி நடக்கவில்லை. எனக்கு அது ஒரு நல்ல அனுபவம் என்று கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர்கள் இருவரும் எதிராக மோதி வருகின்றனர். அதில் தினேஷ் கார்த்திக் 115 கேட்ச்களையும், தோனி 114 கேட்ச்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement