- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித்துக்கு பின் அந்த 2 இளம் வீரர்கள் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டனா வருவாங்க.. டிகே கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனால் ஒரு வழியாக ரோஹித் சர்மா தலைமையில் 17 வருடங்கள் கழித்து இந்தியா ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்ததாக நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதே தம்முடைய லட்சியம் என்று ரோஹித் தெரிவித்துள்ளார். அவருக்குப் பின் சூரியகுமார் யாதவ் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 37 வயதை கடந்து விட்ட ரோஹித் இன்னும் ஓரிரு வருடங்களில் மொத்தமாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆல் ஃபார்மட் கேப்டன்:

அது போன்ற சூழ்நிலையில் இந்திய அணியின் அடுத்த முழு நேர கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் 33 வயதாகும் சூரியகுமார் யாதவும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு பின் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட முடியாது. இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பின் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் இந்தியாவின் ஆல் ஃபார்மட் (டெஸ்ட், ஒருநாள், டி20) கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வழி நடத்தக் கூடியவர்கள் என்று சொல்லும் போது இளமை மற்றும் திறமை கொண்ட 2 வீரர்களின் பெயர் எனது மனதிற்குள் வருகிறது. ஒன்று ரிஷப் பண்ட் மற்றொன்று சுப்மன் கில். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்”

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கணிப்பு:

“தற்போது அவர்கள் ஐபிஎல் கேப்டன்களாக இருக்கிறார்கள். எனவே வருங்காலத்தில் அவர்கள் இந்திய அணியின் ஆல் ஃபார்மட் கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் பிளேயராக பார்ப்பதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: சவாலா விடுறீங்க.. இந்தியாவுக்கு இதான் முக்கியம்.. வங்கதேசம் வரட்டும் இதை செய்ய ஜாலியா இருக்கும்.. ஜெய்ஸ்வால்

அதனாலேயே அவரை தற்போது துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அகர்கர் கூறியிருந்தார். அதனால் தற்போது சுப்மன் கில்லை பிசிசிஐ வருங்கால கேப்டனாக வளர்க்கத் துவங்கியுள்ளது. மறுபுறம் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். எனவே வருங்காலத்தில் இவர்களில் யார் கேப்டனாக வருவார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -