இந்த ஐ.பி.எல் தொடரில் என்னை கவர்ந்த 3 இளம் இந்திய பாஸ்ட் பவுலர்ஸ் இவங்கதான் – தினேஷ் கார்த்திக் தேர்வு

karthik
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதால் கூடுதலாக பல இளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அதனை சரியாக பயன்படுத்திய இளம் வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமையை வெளிக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைக் பெற்றுள்ளனர். மேலும் சிலர் இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் அவரை கவர்ந்த மூன்று இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்த முதல் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் : இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக தக்க வைக்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 13 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

dayal

விக்கெட்டுகளை குறைவாக வீழ்த்தியிருந்தாலும் மிகச் சிறப்பாக அவர் ரன்களை கட்டுப்படுத்துகிறார். டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை பவுண்டரி அடிக்க விடாமலும் அவர் தனது அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டாவது யாஷ் தயால் : குஜராத் அணிக்காக விளையாடி வரும் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் நெட் பவுலராகவும் இருந்துள்ளார்.

- Advertisement -

அவர் இம்முறை குஜராத் அணிக்காக 3.2 கோடிக்கு ஏலம் போனது மட்டுமின்றி இந்த தொடரிலும் 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது மோஷின் கான் : லக்னோ அணிக்காக தேர்வு செய்யப்பட்டு விளையாடி வரும் அவர் 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கான நேரத்தில் மாற்றம். இதெல்லாம் தேவைதானா? – ரசிகர்கள் கேள்வி

அதிலும் குறிப்பாக அவரது சிறப்பு யாதெனில் ஓவருக்கு 6 ரன்கள் குறைவாகவே கொடுத்து வருகிறார். அதோடு ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சொற்ப அளவிலான ரன்களையே விட்டுக் கொடுக்கிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement