ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கான நேரத்தில் மாற்றம். இதெல்லாம் தேவைதானா? – ரசிகர்கள் கேள்வி

IPL 2022 (2)
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் நிச்சயம் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் பி.சி.சி.ஐ-யும் தங்களது சரியான திட்டமிடுதலுடன் கூடிய அட்டவணையை தயார் செய்து பதினைந்தாவது ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக இந்தியாவில் நடத்தி வருகிறது.

Rashid Khan Ruturaj

- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும் வெகு சில போட்டிகளில் எஞ்சியுள்ளன. இந்நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கான தகுதி பட்டியலில் ஏற்கனவே குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள இரண்டு இடங்களும் உறுதியாகிவிடும். அதனைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை கொல்கத்தா மற்றும் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் 29-ஆம் தேதி குஜராத் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி துவங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.

Hardik Pandya GT

அதாவது வழக்கமாக இரவு ஏழரை மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை 8 மணிக்கு மாற்றியுள்ளது. இறுதிப் போட்டியின் போது ரன்வீர் சிங், ஆர் ரகுமான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதனால் போட்டிக்கு முன்னரே அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தபின்னர் போட்டி 8 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி 8 மணிக்கு போட்டி துவங்கினால் அது நிறைவடைய 12 மணிக்கு மேல் ஆகும். இதன் காரணமாக ரசிகர்கள் சிலர் இதெல்லாம் தேவை தானா? என்று தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏனெனில் போட்டி 12 மணிக்கு மேல் நடைபெற்றால் நிச்சயம் ரசிகர்களுக்கு அது சிரமமாக இருக்கும்.

இதையும் படிங்க : இந்த வருஷம் நாங்க இப்படி 9 ஆவது இடம் பிடித்து மோசமாக வெளியேற இதுதான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

எனவே இதெல்லாம் தேவைதானா என்பது போல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு 8 மணிக்கு போட்டி ஆரம்பித்தால் அது நிறைவடைய 12 மணிக்கு மேல் ஆகும் என்பதால் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறையும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement