அவரும் மனிதர் தானே..? தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் என்ன சொன்னார் தெரியுமா ..?

dinesh-karthick
- Advertisement -

நேற்று டெல்லியில் நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது . இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ரசிலின் ஆட்டத்தை பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

dinesh karthik

- Advertisement -

நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20வர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் இவருக்கு உறுதுணையாக டெல்லி அணையின் இளம் வீரர் பிரிதிவி ஷா ஆட்டத்தில் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு பக்கபலமாக இருந்து வந்தார்.

பின்னர் 220 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் 9 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழகவே அணியின் வெற்றி வாய்ப்பு மங்கிகொண்டே போனது. இறுதியில் ஆன்றேவ் ரசல் மட்டும் காலத்தில் இறுதிவரை ஆடி அந்த அணியில் அதிகபட்சமாக 44 ரன்களை குவித்தார். அனால் அவருக்கு யாரும் சரியான பார்ட்னெர்ஷிப் கொடுக்காததால் அவரும் இறுதியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் .

இறுதியில் கொல்கத்தா அணி டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் பேட்டியளித்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவிக்கையில் ” டெல்லி அணி சிறப்பிக்க ஆடியது 220 ரன்கள் என்பது கடினமான இலக்கு தான். அனால் ரசல் கடைசிவரை நின்ரூ சிறப்பாக ஆடினார்.

russel

அவர் இருந்த வரை எங்கள் அணி ஜெத்துவிடும் என்று நம்பிக்கை இருந்தது , ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் அவரும் இறுதியில் அவுட் ஆனார் என்ன செய்வது செய்வது அவரும் மனிதர் தானே , மேலும் எங்கள் அணி இன்னும் பீல்ட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இந்த போட்டியின் தோல்விக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் கரணம் ” என்று தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Advertisement