டெல்லியை இப்படிதான் விழ்த்தினோம்…அவரை மட்டும் ரவுண்டு கட்டி தூக்கினோம்…மனம் திறந்த தினேஷ் கார்த்திக் – யார் தெரியுமா ?

Karthik
- Advertisement -

11வது ஐபிஎல் சீசனில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான லீக்போட்டியில் டாஸ்வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 200 ரன்களை குவித்தது.

Dinesh

- Advertisement -

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியடைந்தது.71 ஓவர் ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணியை சேர்ந்த நிதிஷ் ராணா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

பின்னர் இந்த வெற்றியை குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் “நிதிஷ் ராணா பிடித்த கேட்ச் அற்புதமானது. அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. நாங்கள் வகுத்த வியூகங்கள் சரியாக கைகொடுத்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.

iyer

எங்கள் அணியிலுள்ள மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.போட்டியின்போது பேட்டிங் வேறு, கேப்டன்ஷிப் வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் தனித்தனியாக கையாண்டால் சிறப்பாக செயல்படலாம்” என்றும் தெரிவித்தார்.

Advertisement