நான் அவரது தீவிர ரசிகன்…அவர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டி…அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி !

karthik

இலங்கையில் நடைபெற்று முடிந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 8பந்துகளில் 29ரன்களை குவித்து வங்கதேச அணியை வீழ்த்தி கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக அமைந்தது தினேஷ் கார்த்திக்கின் அபாரமான ஆட்டம்.முத்தரப்பு தொடரின் வெற்றிக்கு பின்னர் தினேஷ் கார்த்திக்கை பலரும் புகழ்ந்துவரும் நிலையில் சிலர் தோனியுடன் அவரை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

Dkarthik

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னை டோனியுடன் ஒப்பிடுவது சரியல்ல,
இப்போது நான் என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளேன் என கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இதுகுறித்து அவர் பேசியதாவது:

தோனி முதல் மாணவனாக இருக்கும் கல்லூரியில் நான் இப்போது தான் சேர்ந்து படித்துவருகின்றேன். அவர் அணியின் மூத்த வீரர் மற்றும் சிறந்த தலைவன். நான் இப்போது தான் என்னுடைய பயணத்தை தொடங்கவே உள்ளேன். அதற்கு முத்தரப்பு தொடர் புதிய உற்சாகத்தை தந்துள்ளது அவ்வளவே. தோனியின் பயணம் என் பயணத்தை விட முற்றிலும் வேறானது.

dhoni

- Advertisement -

இதையும் படியுங்கள் :
இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்ததால்..இலங்கைக்கு இந்த ஆபத்து வரும்…சர்ச்சையை உண்டாக்கிய இலங்கை அமைச்சர்..

மேலும் பேசுகையில் “நான் அவரது ரசிகன். இளம் வீரர்களின் வழிகாட்டி அவர். நான் அவருடைய ஆட்டத்தையும் திறமையையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். பல இளைஞர்களை சிறந்த வீரர்களாக உருவாக்கியவர் அவர். கடினமான பாதைகள் பலவற்றை தன்னம்பிக்கையுடன் கடந்து வந்தவர். அவரது வாழ்க்கையை பின்பற்றினால் பலவற்றை நாம் அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

kohli

இவ்வளவு காலம் வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு கிடைத்த பலன் தான் நடந்து முடிந்த இலங்கை முத்தரப்பு தொடர். என்னுடைய இத்தனை வருட கடும் உழைப்பிற்கும் பயிற்சிக்கும் கிடைத்த பரிசு தான் இது. கடைசி பந்தில் அடிக்கப்பட்ட சிக்ஸரால் இன்று எனக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்றே என் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

Advertisement