- Advertisement -
இந்திய கிரிக்கெட்

18 விக்கெட்ஸ்.. அப்போவே சொன்னேன் கேட்கல.. சாம்பியன்ஸ் ட்ராபியில் வருணை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு.. டிகே பதிவு

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா 79, சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து 12.5 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார்கள். இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்திய அணியின் தவறு:

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அணியில் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுக்காமல் இந்தியா ட்ரிக்கை தவற விட்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2023 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம், தென்னாப்பிரிக்க தொடர்களில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அது போக 2025 விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக 18 விக்கெட்டுகள் எடுத்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அப்போது அவரை சாம்பியன்ஸ் டிராபில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

டிகே ஏமாற்றம்:

இது பற்றி 2024 நவம்பர் 10ஆம் தேதி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுக்காவிட்டால் அவர்கள் கல்லறையில் விழுவதற்கான தவறை செய்கிறார்கள் என்று அர்த்தம். தற்போது வருண் அற்புதமான பவுலராக மாறியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 1, 3, 4, 4,.. கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத ரோஹித், கில், பண்ட்.. ரசிகர்கள் ஏமாற்றம்.. மும்பை திணறல்

அதை இன்று மேற்கோள் காட்டியுள்ள தினேஷ் கார்த்திக் “இந்திய அணி வருண் சக்கரவர்த்தியை தங்களுடைய அணியில் பொருத்தி இருக்க முடியுமா?” என்று மீண்டும் பதிவிட்டுள்ளார். முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதனால் வருணுக்கு

- Advertisement -