இந்தியாவில் 2024 – 25 ரஞ்சிக் கோப்பையின் இரண்டாவது சுற்று இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் மும்பை கிரிக்கெட் அணிக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.
அந்தத் தோல்விக்கு பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க தவறிய ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார். அந்த சூழ்நிலையில் தமது டெஸ்ட் கேரியரை காப்பாற்றுவதற்காக அவர் ரஞ்சிக்கோப்பையில் விளையாட முடிவெடுத்துள்ளார்.
கெட்டப் மாறினாலும்:
அதனால் ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 ரன்கள் எடுத்து தம்முடைய ஆட்டத்தை நங்கூரமாக துவங்கினார். ஆனால் அப்போது உமர் நசீர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா மிகவும் ஏமாற்றத்துடன் சென்றார். அந்த வகையில் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவருடைய கம்பேக் சொதப்பலாகவே ஆரம்பித்தது.
அதைப் பார்த்த ரசிகர்கள் கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறவில்லையே என்று சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் அவர் அசத்துவாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல அவருடன் துவக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருந்தும் 4 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
தொடரும் சொதப்பல்கள்:
அடுத்ததாக வந்த ஹர்திக் தாமூர் 7, கேப்டன் ரகானே 12, ஸ்ரேயாஸ் ஐயர் 11, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் 110-7 என மும்பை தடுமாறி வருகிறது. இது ஒரு புறமிருக்க பஞ்சாப் அணிக்காக விளையாடும் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி இன்னும் நான் ஃபார்முக்கு வரவில்லை என்பதை நிரூபித்தார்.
இதையும் படிங்க: 50ஸ் பற்றி கவலைப்படாம அடிச்சு நொறுக்குறாங்க.. இந்திய டி20 அணியின் சுயநலமற்ற முடிவுக்கு மஞ்ரேக்கர் பாராட்டு
அதே போல டெல்லி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். மொத்தத்தில் சமீபத்திய தோல்விகளுக்கு காரணமான முக்கிய வீரர்கள் யாருமே ரஞ்சிக் கோப்பையிலும் அசத்தவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஆவது அவர்கள் அசத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



