ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 2013க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பைகளை வென்றது.
எனவே 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட இந்தியாவுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக செயல்படக்கூடிய நியூசிலாந்து இம்முறையும் சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 2 சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். சொல்லப்போனால் தனது கேரியரில் இதுவரை அடித்த 5 சதங்களையும் அவர் ஐசிசி தொடர்களில் மட்டுமே அடித்துள்ளார்.
இந்தியாவின் சவால்கள்:
இந்நிலையில் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் ரவீந்திராவை விட கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு சவாலை கொடுப்பார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதே போல பௌலிங் துறையில் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் இந்தியாவுக்கு பிரச்சனையைக் கொடுப்பார் என்றும் கார்த்திக் கூறியுள்ளார். அதனால் இந்தியா வெற்றிப் பெறுவதற்கு அந்த இருவரையும் சமாளிப்பது முக்கியம் என்று தெரிவிக்கும் கார்த்திக் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“கேன் வில்லியம்சன் மீண்டும் சவாலைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடக்கூடிய திறமை கொண்டவர். கேப்டன் சான்ட்னர் பெரியப் பிரச்சனையாக இருப்பார். ஏனெனில் அவர் எதையும் எளிதில் கொடுக்க மாட்டார். சரியாக எதை செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்த அவர் இந்திய அணிக்கு வலியைக் கொடுக்கும் வகையில் பவுலிங் செய்யக்கூடும்”
திறமையான நியூஸிலாந்து:
“மேலும் நல்ல கேப்டனாகவும் இருக்கும் அவருக்கு கேன் வில்லியம்சன், டாம் லாதம் உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள். எனவே நியூசிலாந்து நல்ல அணி. கோப்பையை வெல்வதற்கு நாம் அவர்களை தோற்கடிக்க வேண்டிய ஒரு அணி. இந்தத் தொடரில் அவர்களும் சிறந்த அணியாக செயல்பட்டு ஃபைனல் வந்துள்ளார்கள். இந்தியா இந்தத் தொடரை வெல்ல வேண்டுமெனில் சிறந்த அணியை வீழ்த்த வேண்டும்”
இதையும் படிங்க: இதை மறந்துட்டு அவரை சமாளிச்சுட்டா.. ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தலாம்.. நியூஸிலாந்துக்கு அக்தர் ஆலோசனை
“அந்த அணி நியூசிலாந்து அணியாக இருக்கிறது” என்று கூறினார். இது போக சான்ட்னர், கிளான் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல் என இந்திய அணிக்கு சமமாக நியூசிலாந்து அணிகளும் 4 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் துபாயில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய அணிக்கு நியூசிலாந்து மிகப்பெரிய சவாலைக் கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.



