ஒரே நேரத்தில் 3 திறமை.. ஆஸ்திரேலியா லெவலுக்கு இந்தியா முன்னேற ஐபிஎல் தான் காரணம்.. டிகே பேட்டி

Dinesh Karthik 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதற்கு முன்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் ஃபைனல் வரை சென்று இந்தியா அசத்தியது. அப்படியே 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற இந்தியா தற்சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுக்கும் டாப் அணியாக ஜொலித்து வருகிறது.

அந்த நிலையில் உலகிலேயே இந்தியாவிடம் மட்டுமே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் 3 விதமான அணிகளைக் களமிறக்கும் திறமை இருப்பதாக மிட்சேல் ஸ்டார்க் சமீபத்தில் பாராட்டினார். இந்நிலையில் ஒரே நேரத்தில் 3 வகையான அணிகளை களமிறக்கும் திறமை இந்தியாவிடம் இருப்பதாக தினேஷ் கார்த்திக்கும் தெரிவித்துள்ளார். அதற்கு ஐபிஎல் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸிக்கு நிகராக இந்தியா:

ஐபிஎல் ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற மனநிலையை இந்தியர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நூலாக ஐபிஎல் வந்தது முதல் நம்மால் ஒரே சமயத்தில் 2 – 3 விதமான சர்வதேச அணிகளை களமிறக்க முடிகிறது. அந்த 3 அணிகளுமே போட்டியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்”

“தற்சமயம் இந்தியா சிறந்த இடத்தில் உள்ளது. அவர்களுடைய வீரர்கள் நல்ல வகைப்படுத்தலைக் கொண்டுள்ளனர். ஐபிஎல் நமது வீரர்களிடம் வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டு வந்துள்ளது. அதனால் நிறைய பொருளாதார ரீதியான பயன்கள் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி ஐபிஎல் அணிகள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான வசதிகளை செய்கின்றனர்”

- Advertisement -

ஐபிஎல் தான் காரணம்:

“அப்படி அடிப்படை வசதிகள் வளரும் போது விளையாட்டின் தரமும் தாமாக உயரும். 2008 – 09 காலகட்டங்களில் ஆஸ்திரேலியா எவ்வாறு விளையாடுகிறது என்ற ஐடியாலஜி எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்கு ஓநாய் கூட்டங்களை போல் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் எனது முதல் வருடத்தில் கிளன் மெக்ராத்துடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது”

இதையும் படிங்க: நேத்து ஆஸியை அடிச்சுட்டு இப்போ செய்றதை பாருங்க.. யுவியை ஹோலி வண்ணதால் நனைத்த சச்சின்

“அவருடன் பயிற்சிகளை செய்ததால் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அது சிறந்த அணிகளுக்கு எதிராக அசத்துவதற்கான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது” என்று கூறினார். அதாவது ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அது இளம் இந்திய வீரர்கள் வளர்வதற்கு உதவுவதாக தினேஷ் கார்த்திக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement