விராட் கோலி சொன்னதை சுப்மன் கில் செஞ்சு காமிக்குறாரு.. கேப்டனானதும் மிரட்டும் ரகசியம் பற்றி டிகே

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

முன்னதாக ரோஹித் சர்மாவுக்கு பின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட போது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவலில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னால் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

விராட் கோலி சொன்னதை:

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த சுப்மன் கில் 2வது போட்டியில் 269, 161 ரன்களை விளாசி உலக சாதனை படைத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சாதாரண பேட்ஸ்மேனாக தடுமாறி வந்த அவர் கேப்டனாக மாறியதும் இப்படி மிரட்டலாக பேட்டிங் செய்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேப்டன்ஷிப் தான் தம்மை சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட வைத்ததாக விராட் கோலி சொன்னதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதை தற்போது சுப்மன் கில் செய்து காண்பிப்பதாக பாராட்டும் தினேஷ் கார்த்திக் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை சில நாட்களுக்கு முன்பாக நான் சந்தித்தேன். அப்போது விராட் கோலி என்னிடம் “மக்கள் நான் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறேன்” என்று நினைப்பதாக சொன்னார்”

- Advertisement -

செய்து காட்டும் கில்:

“ஆனால் கேப்டன்ஷிப் கிடைத்ததே என்னுடைய வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என்றும் விராட் கோலி சொன்னார். அதைக் கேட்ட நான் அதே வரிகள் சுப்மன் கில்லுக்கும் பொருந்தும் என்று உங்களிடம் சொல்வேன். “கேப்டன்ஷிப் கிடைத்த போது ஏற்கனவே வித்தியாசமாக பேட்டிங் செய்யும் எனக்கு அணியின் வெற்றியில் முழுமையாக பங்காற்ற இன்னும் சிறந்த வாய்ப்பு கிடைக்காது” என்றும் விராட் கோலி சொன்னார்”

இதையும் படிங்க: 3வது டெஸ்டில் அவரை களமிறக்குவோம்.. லார்ட்ஸ் வேற மாதிரி இருக்கும்.. இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த மெக்கல்லம்

“அவரைப்போலவே இங்கே ஒருவர் பசியுடன் இருக்கிறார். அவரிடம் திறமை, நுட்பம், மனநிலையில் இருக்கிறது. அப்படிப்பட்டவர் கேப்டனாக வந்தால் முன் பாதத்திலிருந்து அணியை வழி நடத்துவார்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலியும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 சதங்கள் அடித்து சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடியதை விட அதிக ரன்கள் குவித்து இந்தியாவை நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement