- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் வெச்சு ரசிகர்கள் தப்பு கணக்கு போட்டாங்க.. இந்தப் பையன் ஸ்பெஷல் பிளேயரா வருவாரு.. டிகே பாராட்டு

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

முன்னதாக அந்தத் தொடரில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர். அதே போல ரியான் பராக் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அத்துடன் 3வது போட்டியில் பேட்டிங்கில் முக்கிய நேரத்தில் 26 ரன்களை அதிரடியாக எடுத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஸ்பெஷல் பிளேயர்:
ஐபிஎல் தொடரில் 2019இல் அறிமுகமான ரியான் பராக் 2023 வரை மிகவும் சுமாராக விளையாடி ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக அந்த காலகட்டங்களில் விராட் கோலியை போல சமூக வலைதளங்களில் அவர் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதனால் முதலில் செயலில் காட்டி விட்டு பின்பு பேசுங்கள் என்று அவரை ரசிகர்கள் விமர்சித்தனர்.

இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ரியான் பராக் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமானார். அந்தத் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை நம்பி இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் தேர்ந்தெடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளால் ரியான் பராக்கை ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் வருங்காலங்களில் அவர் ஸ்பெஷல் வீரராக உருவெடுப்பார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை நான் அழுத்தத்தின் கீழ் தள்ள விரும்பவில்லை. ஐபிஎல் தொடரிலும் இந்திய கிரிக்கெட்டிலும் அவர் விளையாடும் விதத்தை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். உண்மையில் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கிரிக்கெட்டர் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரை அச்சுறுத்தும் மழை.. தொடர் நடக்குமா? கொழும்பு வெதர் ரிப்போர்ட்

“இருப்பினும் அவர் ஸ்பெஷல் கிரிக்கெட்டர் போல தெரிகிறார். அவரிடமிருந்து நிறைய நல்ல விஷயங்கள் வந்துள்ளது. சிறப்பான அணுகுமுறை, மனநிலை, நெறிமுறைகளைக் கொண்டுள்ள அவர் டாமினேட் செய்ய துவங்கியுள்ளார். குறிப்பாக பந்து வீச்சில் அவர் முக்கிய பங்காற்றுகிறார். எனவே ரியான் பராக், திலக் வர்மா போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு வருங்காலங்களில் ஸ்பெஷல் வீரர்களாக இருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -